NFPE - AIPEU GROUP – C
| 
 
 தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் மகிளா கமிட்டி 
     
                                சென்னை - 600 002 
 
   ஏஞ்சல் சத்தியநாதன்                        R .மணிமேகலை  
                     
               தலைவர்                                                                    கன்வீனர் 
 | 
      
        சுற்றறிக்கை எண் : TNMSC -04                                                  தேதி : 18.07.2012
அன்புத் தோழர்களே, அருமைத் தோழியர்களே! வணக்கம்.
| 
 
அனைத்து மத்திய மாநில அரசு ஊழியர்கள் ஓரணியாய் 
பாராளுமன்றம் நோக்கி மாபெரும் எழுச்சிப் பேரணி | 
போராடத் தயங்கியவர்கள் வென்றதில்லை!
போராடித் தோற்றவர்கள் யாருமில்லை!!
      பாராளுமன்றம் நோக்கிப் பேரணியாய் 
      அனைத்து மத்திய மாநில அரசு ஊழியர்கள் ஓரணியாய் 
      ஜூலைத் திங்கள் 26-ல் ஆர்ப்பரித்து அணிவகுப்பு 
     14 அம்ச கோரிக்கைகள் தீர்த்துவைக்க முன்வைப்பு! 
     7-வது ஊதியக்குழு உடனடியாக அமைத்திட 
     அதன் பலன்களை 1.1.2011 முதல் அமல் படுத்திட 
     5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியமாற்றம் செய்திட 
     50% அகவிலைப்படியை ஊதியத்துடன் இணைத்திட 
      கருணை அடிப்படையிலான பணி நியமனம் நிபந்தனையின்றி வழங்கிட  
      காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பிட  
      வேலைப்பளுவிற்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்கிட
      அரசுப் பணிகளை தனியாருக்குத் தாரைவார்ப்பதைத் தடுத்திட
      விண்ணை முட்டும் விலைவாசியைக் கட்டுப்படுத்திட  
      தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக்கிட 
      போஸ்ட்மேன், குரூப்-D காலிப்பணியிடங்களை GDS -க்கு வழங்கிட
      GDS ஊழியர்களின் போனஸ் உச்சவரம்பை உயர்த்திட
     
      மிகுதி நேரப்படி, இரவுப் பணிப்படி, சீருடை தையற்கூலி உயர்த்திட
      நடுவர்மன்ற தீர்ப்பாய சலுகைகளை நடைமுறைப்படுத்திட
      தொழிற் சங்கங்களைப் பழிவாங்கிடும் போக்கினை   நிறுத்திட   
      வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு சட்டப்பூர்வ உரிமை வழங்கிட
      உத்திரவாதமில்லா புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட
      வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்பட 
      வெகுண்டெழுந்த ஊழியர்களின் ஒன்றுபட்ட போராட்டம் 
      நவம்பர் திங்கள் நாடுதழுவிய வேலை நிறுத்தத்திற்கான முன்னோட்டம்!
      புறப்படுவோம் அணியணியாய் தலைநகரம் நோக்கி 
      வென்றிடுவோம் கோரிக்கைகளை செங்கொடி ஏந்தி 
      அதிரட்டும் டில்லி மாநகரம் நம் முழக்கத்தால் 
      வெல்லட்டும் கோரிக்கைகள் நம் ஒன்றுபட்ட இயக்கத்தால்!
                                                                                                     R.மணிமேகலை – கன்வீனர்
                                                                                                                                         
                                                                                                                                                                   9003065778
                                                                                                   (ஆக்கம்: காசி)