WELCOME

WELCOME TO ANNA ROAD DIVISIONAL BRANCH WEB SITE

5 ஆகஸ்ட், 2015

இளைஞர்களின் தலைக்குமேல் தொங்கும் கத்தி !





Probation and / or confirmation of Direct Recruit P.A./S.A.s - New procedure introduced
புதிய  CONFIRMATION /PROBATION விதி - 
இளைஞர்களின்  தலைக்குமேல் தொங்கும்  கத்தி !

கீழே காணும் நேரடி  எழுத்தருக்கான  PROBATION மற்றும் CONFIRMATIONக் கான 16.04.2015 இல் அளிக்கப்பட்டுள்ள புதிய விதிகளின்படி 

முதலாவதாக 

 1. பணிப்  பயிற்சியின் போது  வைக்கப்படும் தேர்வில் குறைந்த பட்சம் 60%
     மதிப்பெண் பெற்று  தேர்ச்சி பெற வேண்டும் .(இது 2011 க்கு பின்னர் 
     நடைமுறையில் உள்ளது )

2.  அப்படி 60% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறவில்லையானால் இரண்டு
      வாரம் பணிப்  பயிற்சி  நீட்டிக்கப்படும் . அந்த காலத்தில் இரண்டு TEST 
      வைக்கப்படும். அவற்றில் குறைந்த பட்சம் 60% மதிப்பெண் பெற்று 
      தேர்ச்சி  பெறவேண்டும் . 

3.   அப்படி தேர்ச்சி பெறவில்லையானால் SATISFACTORY  COMPLETION  OF 
      TRAINING  REPORT  அளிக்கப்படமாட்டாது.

4.   மேலும் இரண்டு ஆண்டுகளுக்குள் வழங்கப்படும்  இரண்டு 
       வாய்ப்புகளில்  குறைந்த பட்சம் 60% மதிப்பெண்பெறவில்லையானால் 
       அவர்களை  இலாக்கா பணியிலிருந்து  TERMINATE  செய்திட 
       நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

5.   இது தவிரதேர்வில் குறைந்த பட்சம் 60% மதிப்பெண் பெற்று தேர்வு 
      பெற்றாலும் கூடஅவர்களது PROBATION காலத்தில்  அவர்களது 
      CONDUCT & PERFORMANCE  UNSATISFACTORY  என்று தீர்மானிக்கப்     
      பட்டால்  அவர்களது சேவை  TERMINATE  செய்யப்படும் .

இந்த உத்தரவில் நம் மாநிலச் சங்கத்தின் கருத்து :-

1. REVISED P .A . RULES ,2011 அடிப்படையில் எழுத்தர் தேர்வில் கலந்து 
    கொள்வதற்கு அடிப்படைத் தகுதி 60%, 50%, 45% (GEN , OBC, SC /ST )
    மதிப்பெண் என்பது  நீக்கப்பட்டு MINIMUM  PASS  என்பது அறிமுகப் 
    படுத்தப் பட்ட பிறகு பணிப்  பயிற்சியில் குறைந்தபட்சம் 
    60% மதிப்பெண் பெற வேண்டும் என்பது அடிப்படையில் தவறானது,

2. எழுத்தர் தேர்வில்  BASED  ON MERIT  தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ,
    பணிப்  பயிற்சியில்  கட்டாய மதிப்பெண்  வேண்டுவது  சட்டத்திற்கு   
    புறம்பானது.  CONSTITUTION க்கு எதிரானது.

3. எழுத்தர் தேர்வில் QUALIFYING  MARKS  40%, 37%, 33% என்று வைக்கப் 
    பட்ட    பிறகு பணிப் பயிற்சியில் QUALIFYING  MARKS  60% என்று 
    நிர்ணயிக்கப்பட்டது முற்றிலும் முரணானது.

4.  சமூக நீதி  அடிப்படையில் மத்திய அரசின் நேரடித்தேர்வுகளுக்கே  SC
    /ST,   OBC பிரிவினருக்கு பெறவேண்டிய குறைந்த பட்ச மதிப்பெண்கள் 
     RELAX  செய்து வழங்கப்படும்போது சாதாரணமான இலாக்காவின் 
     பணிப்பயிற்சிக்கு  கட்டாயமாக குறைந்தபட்ச மதிப்பெண்60%அனைத்து 
    பிரிவினருக்கும் என்று நிர்ணயிக்கப் பட்டது சமூக நீதிக்கும்  அரசியல் 
    அமைப்புச்  சட்டத்திற்கும்  முற்றிலும் எதிரானது.

5. இலாக்காவில் அளிக்கப் படும் பணிப்  பயிற்சி என்பது இலாக்கா 
    விதிகள்  மற்றும்  பணிகளின் செயல்பாட்டு முறைகள் குறித்து
    தெரிந்துகொள்ளத் தானே  தவிர இதில் பெறப்படும் மதிப்பெண்கள் 
    அடிப்படையில்தான்  பணி  நிரந்தரம் செய்யப்படும் என்பது  அடிப்படை 
    விதிகளுக்கு எதிரானது.

6. PROBATION  காலத்தில் CONDUCT & PERFORMANCE  UNSATISFACTORY
    என்று  கருதினால்  பணி  நீக்கம் செய்யலாம் என்பது CORPORATE  சட்டம்
    போல உள்ளது.  CONDUCT & PERFORMANCE க்கு எந்தவித அளவுகோலும் 
   நிர்ணயிக்கப் படவில்லை. 

   PTC  யில் கூட  "கழிப்பறை ஏன் கழுவவில்லை ,  காந்தியார் செய்ய     
   வில்லையா"என்று  கேட்ட/கேட்கும் அதிகாரிகள் உள்ளனர். 

SHRAMDHAN    செய் , YOGA செய் . காலை  4.00 மணிக்கு படுக்கையில் இருந்து எழு  .  12மணிநேரம் பயிற்சி வகுப்பில் தொடர்ந்து இரு. விடுமுறை     தினங்களில்  கூட ஊருக்கு செல்ல அனுமதி கிடையாது முடி வெட்டிக் கொள் , SHOE  போடு , TIE கட்டு . தமிழ் நாட்டில் வேட்டி கட்டக் கூடாது  " என்றெல்லாம்   தடாலடி உத்திரவிட்டு  ஊழியர்கள் கொடுமைப்படுத்தப்பட்டது  இங்கு  உண்டு .  இந்த சூழ்நிலையில் எந்த ஊழியராவது எதிர்த்துக் கேட்டால்  இனி CONDUCT  & PERFORMANCE சரியில்லை என்று  REPORT  அளிக்க முடியும்.

  ஆக இந்த விதி  கொத்தடிமைத்தனத்தை  மத்திய அரசு   சேவையில்  நிச்சயம் அதிகப்படுத்தும். " MODEL  EMPLOYER  "ஆக இருக்க    வேண்டிய  மத்திய அரசுத்   துறையான அஞ்சல் துறை அதற்கு மாறாக கொத்தடிமை  காலத்திற்கு நம்மை இட்டுச்  செல்வதாகவே " இந்த விதி " நமக்கு  அறிவுறுத்துகிறது. 

ஏற்கனவே  CONFIRMATION  EXAMINATION வைக்கப் பட்டதே தவறு என்று 
போராடி அதனை நீக்கிய நாம் இன்று அந்த சட்டமே பரவாயில்லை என்று கூறுமளவுக்கு புதிய சட்டத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. 

இந்த சட்டத்தை நிச்சயம் நாம் எதிர்க்கவேண்டிய கடமையில் உள்ளோம்.
தமிழக அஞ்சல் மூன்று அதற்கான முன் கை எடுக்கும் . நம்முடைய அகில இந்திய சங்கம் மற்றும் சம்மேளனத்தின்  பார்வைக்கு இதனை நாம் கொண்டு செல்வோம். இதனை நீக்குவதற்கான முழு நடவடிக்கை களில் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம் . இதன் மீது  உங்கள் கருத்துக்களை நிச்சயம்  மாநிலச் சங்கத்திற்கு நீங்கள் தெரிவிக்க வேண்டுகிறோம். உடன் EMAIL  மூலமோ அல்லது  COMMENTS  பகுதியிலோ  உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறோம்.