WELCOME

WELCOME TO ANNA ROAD DIVISIONAL BRANCH WEB SITE

13 ஜூலை, 2012

Circular 31

                          NFPE
       அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், குரூப் - C
அண்ணா சாலை கிளை, சென்னை - 600 002.






         
ÍüÈȢ쨸 ±ñ - 31        (¯ÚôÀ¢É÷ ÍüÚìÌ ÁðÎõ)                      §¾¾¢ : 14.07.2012

அன்புத் தோழர்களே, அருமைத் தோழியர்களே! வணக்கம்.

சேலம் மேற்கு கோட்டக் கண்காணிப்பாளர் திரு A.சுந்தரராஜன்  

அவர்களின்   ஊழல் போக்கைக்  கண்டித்து     16.07.2012 அன்று 

மாநிலம் முழுவதும்

மாபெரும் கண்டன ஆர்பாட்டம்


ஊழலின்  ஊற்றே!  ஊருக்கு  உபதேசமா?
               சேலம் மேற்கு கோட்டக் கண்காணிப்பாளர் திரு A.சுந்தரராஜன்  அவர்கள்  ஆய்வுக்கு  செல்லும்
அஞ்சலகங்களில் எல்லாம்  பணிச்சுமையிலும்,   ஊழியர் பற்றாக்குறையிலும்  அல்லல்படும்  ஊழியர்களுக்கு
 
அன்றாடம் ஒரு தண்டனை  வாரி வழங்குகிறார்.   தற்செயலாக  ஏற்படும்  சிறு சிறு  தவறுகளுக்குக்கூட  Rule
14 மற்றும் Rule 16 தண்டனை தருவதை ஒரு பொழுது போக்காகவே கொண்டுள்ளார்! இப்படி சுமார் 28

ஊழியர்களுக்கு   இவர்   தண்டனை  வழங்கி  மகிழ்ந்துள்ளார்!  ஊழியர்கள் தொழிற் சங்கத்திடம்

முறையிட்டால் தண்டனை இரட்டிப்பாகும் என்ற மிரட்டல் வேறு விடுகிறார். ஆனால்  சிறு தவறுகளைக்கூட

பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கும் இவர், இலாக்காவின்  ஆய்வு விடுதியில் தங்கிக்கொண்டு,   லாட்ஜில்

தங்கியதாக  போலி  ரசீது கொடுத்தும், மண்டல  அலுவலகம்  மற்றும் வெளியூர்  சென்ற 

நாட்களுக்கெல்லாம்  சேலத்தில் சாப்பிட்டதாக   போலி ரசீது போட்டும்   பயணப்படி  வாங்கியுள்ளார்.

இப்படியாக சுமார் ரூ 1,40,000.00 வரை இலாக்கா  பணத்தை   சுமார் 6 மாதங்களில் 

முறைகேடாக சுருட்டியுள்ளார். இதையெல்லாம்  மறைப்பதற்காக  அல்லும்  பகலும்  அயராது  பாடுபடும்

உழைக்கும்  ஊழியர்களை தண்டித்து மாநில/ மண்டல அதிகாரிகளை  திசை  திருப்புகிறார்.

ஊழல் அதிகாரியைப் பாதுகாக்கும் மண்டல நிர்வாகம்!
                12 ஆண்டுகளுக்கு  ஒரு முறை மட்டுமே  பூத்துக்குலுங்கும்  குறிஞ்சி  மலர்களைப்போல, 40  

ஆண்டுகளுக்கு  ஒரு  முறை மட்டுமே வெளிப்பட்டு காட்சியளிக்கும் காஞ்சிபுரம் அத்திவரதரைப் போல 

இலாக்காவிற்கு உயர்வைத்  தேடித்தரும் அதிகாரிகள் அரிதாகவே கிடைக்கிறார்கள். முறைகேடுகளில்

ஈடுபட்டு இலக்காவிற்கு  இழுக்கு  ஏற்படுத்தும்  இத்தகைய  ஊழல்  அதிகாரிகள் பெருகி வருகிறார்கள்.

இவர்களை, கட்டுப்படுத்த  வேண்டியதும் - கண்டிக்க  வேண்டியதும் - தண்டிக்க  வேண்டியதும்  மண்டல/ 

மாநில நிர்வாகத்தின் கடமையல்லவா? மாறாக  மத்திய ,மாநில சங்கங்களால் தக்க ஆதாரங்களுடன் மண்டல

நிர்வாகத்திடம்  இருமுறை  புகார் அளிக்கப்பட்டும் நான்கு மாதங்களாக   உரிய  விசாரணைக்கூட  செய்யாமல் 

ஊழல்  புரியும் கோட்டக் கண்காணிப்பாளரை அரவணைத்து பாதுகாக்கிறது நிர்வாகம்! தொழிலாள 

வர்கத்தை தண்டிக்கக் காட்டும்  அவசரமும் ஆர்வமும், அதிகாரிகள்  என்றால் மட்டும்  மங்கிப்போவதன்

மர்மம்  என்ன?   அஞ்சல் சட்டமும் விதிமுறைகளும் அனைவருக்கும் ஒன்றுதானே? வெயில், மழை  பாராது

உழைக்கும் ஊழியர்களின் 10 ரூபாய், 20 ரூபாய் பிரச்சனைகளைக்ககூட சிபிஐ கொண்டுசெல்லும்

நிர்வாகம், அதிகாரிகள்  என்றால் லட்சம்  என்றாலும்  அலட்சியம்  காட்டுவதை லட்சியமாக கொண்டுள்ளதா?  

அனைத்துக் கோட்ட /கிளைகளில் கண்டன ஆர்பாட்டம்

       சேலம் மேற்கு கோட்டக்   கண்காணிப்பாளரின் தொழிலாளர் விரோத, தொழிற்சங்க  விரோதப்  போக்கை 

கண்டித்தும், ஊழியர்கள் மீது காழ்ப்புணர்ச்சியில்    எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை   ரத்து

செய்திடக் கோரியும், போலி ரசீது  தயாரித்துக் கொடுத்து முறைகேடாக பெற்ற பணம் ரூ 1,40,000.00 –த்தை

உடனடியாக அவரிடமிருந்து பிடித்தம் செய்யவும், அவர் மீது  ஒழுங்கு  நடவடிக்கை எடுக்கக்கோரியும்,

தொழிற்சங்கம்  அளித்த  புகார்கள் மீது இதுவரை எவ்வித  நடவடிக்கையும் எடுக்காத  நிர்வாகத்தை 

கண்டித்தும், தமிழ்  மாநிலச்  சங்க அறைகூவலை  ஏற்று 

                           மாபெரும் கண்டன ஆர்பாட்டம் 

           நாள்:  16.07.2012 திங்கள்         மதியம்  1.00 மணி    இடம்: CPMG அலுவலகம் முன்பு
       
விளக்கவுரை:   தோழர்  J. ஸ்ரீவெங்கடேஷ்   மாநிலத் தலைவர்                                                                                                         
                      தோழர்   J. ராமமூர்த்தி   மாநிலச் செயலர்

                                           தோழர்  A. வீரமணி   மாநில நிதிச் செயலர் / உதவி   பொதுச் செயலர்   


       கடிவாளம்  இல்லாத  குதிரையாய் தறிகெட்டு  ஓடும்  இதுபோன்ற ஊழல் அதிகாரிகளுக்கு  எச்சரிக்கை
மணியடிக்க, அவர்தம் கொட்டத்தை அடக்க, துறையின் நட்டத்தை தவிர்க்க அனைவரும்                                        

வீறுகொண்டெழுந்து அலை  கடலென ஆர்ப்பரித்து  ஆர்பாட்டத்தில்  தவறாது கலந்துகொண்டு நீதியை

நிலைநாட்ட வாரீர்! வாரீர்!!            
தோழமையுடன்,
        A. முத்துகுமார்                                         S. வெங்கடேசன்                                                   P. தியாகராஜன்
                   தலைவர்                                                           நிதிச்செயலர்                                                                     செயலர்
***************************************************************************************************************************

கருத்துகள் இல்லை: