இரண்டாவது மற்றும் மூன்றாவது
ஊதியக்குழுவில் தேவைக்கேற்ற
குறைந்த பட்ச ஊதியம்வேண்டி 1960, 1968 வேலைநிறுத்த போராட்டங்களில்12000 க்கும் அதிகமான தோழர்கள் SUSPEND செய்யப்பட்டதும் 4000 க்கும் மேல் ஊழியர்கள் DISMISS செய்யப்பட்டதும், 17780 ஊழியர்கள் சிறையில்அடைக்கப் பட்டதும் , NFPTE இன் அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டதும் நம் இயக்க வரலாறு.
போலீசாரின் குண்டாந்தடியடிகளில் தாக்குண்டு உதிரம் சிந்திய தோழர்கள் பல்லாயிரக்கணக்கில் !
வேலைநிறுத்தம் அறிவித்த குற்றத்திற்காக நடு ரோட்டில் கை விலங்கிடப்பட்டுகிரிமினல்கள் போல அவமானப் படுத்தப் பட்டு இழுத்துச் செல்லப்பட்டனர் நம் தலைவர்கள் !
போலீசாரின் குண்டாந்தடியடிகளில் தாக்குண்டு உதிரம் சிந்திய தோழர்கள் பல்லாயிரக்கணக்கில் !
வேலைநிறுத்தம் அறிவித்த குற்றத்திற்காக நடு ரோட்டில் கை விலங்கிடப்பட்டுகிரிமினல்கள் போல அவமானப் படுத்தப் பட்டு இழுத்துச் செல்லப்பட்டனர் நம் தலைவர்கள் !
பிகானீரில், மரியானில், பொங்கை கானில் , பதான்கோட்டில், இந்திர ப்ரஸ்தில் வேலைநிறுத்தப்பேரணியில் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான தோழர்களின் எண்ணிக்கை 14.
இப்படி உடல் , பொருள், ஆவி என அர்ப்பணித்து நம்NFPTE இயக்கத் தோழர்களும் தலைவர்களும்பெற்றுத்தந்ததே இன்று நாம் பெற்றிருக்கும்உயர் ஊதியமும் , வேலை நிறுத்தம் செய்தால் 'NO WORK - NO PAY ' மட்டுமே என்ற அதீத உரிமையும்ஆகும்.
ஆனால் ஊதியக்குழு வேண்டி, 50% பஞ்சப்படி இணைப்புவேண்டி, GDS ஊழியர் பணி நிரந்தரம் வேண்டி , வேலைநிறுத்தம் செய்திடும் உரிமை பறிக்காமல் இருக்கவேண்டி , புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்திடவேண்டி, பணியில் இறக்கும் ஊழியர்களின்வாரிசுகளுக்கு முழுமையாக வேலைவாய்ப்பு வேண்டி நடைபெறும் இன்றைய போராட்டத்தில் நம் பங்கு என்ன? 'வேலை செய்யவில்லை - சம்பளமில்லை' என்பதுமட்டும் தானே ?
இந்தத் தியாகத்திற்கு கூட நம் தோழர்களை நாம்தயார்படுத்த வில்லையானால் , தேவைக்கேற்றகுறைந்த பட்ச ஊதியம் வேண்டி குண்டடி பட்டு உயிர்நீத்த நம் முன்னோர்களின் ஆன்மா கூட நம்மைமன்னிக்காது .
கிளர்ந்தெழுவீர் தோழர்களே ! ஊதியக்குழுவுக்கானமுதல் போர்ப்பரணி நமதாகட்டும் ! நமது வேகமும்வீச்சும் இதர பகுதி தோழர்களை ஒன்றிணைக்கட்டும் !போராட்டத் தீ வெகு வேகமாகப் பரவட்டும் ! ஏழாவதுஊதியக் குழுவை நிச்சயம் நாம் பெறுவோம் என்ற நிலைஉருவாகும் ! இந்த வெற்றி உங்கள் கைகளில் !
REMEMBER
HISTORIC
1960 AND1968
STRIKES
FOR
NEED BASED
MINIMUM
WAGES
RENEW THE
VIGOUR ON
12 - 12 - 12
STRIKE! STRIKE!!
STRIKE !!!
12TH DECEMBER 2012
ALL INDIA CENTRALGOVT. EMPLOYEES
STRIKE
13 lakhs Employees unitedly demand the Central Government to
CHANGE THE POLICIES
“WORKERS ARE
NOT BEGGARS”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக