WELCOME

WELCOME TO ANNA ROAD DIVISIONAL BRANCH WEB SITE

20 மார்ச், 2013

29 TH ALL INDIA CONFERENCE 10.3.2013 TO 14.03.2013


NFPE
«¨Éò¾¢ó¾¢Â «ïºø °Æ¢Â÷ ºí¸õ, Ìåô-C
«ñ½¡º¡¨Ä ¸¢¨Ç, ¦ºý¨É-600002 http://aipeup3ard.blogspot.com         email : aipeup3ard@gmail.com
          

ÍüÈȢ쨸 ±ñ - 33         (¯ÚôÀ¢É÷ ÍüÚìÌ ÁðÎõ)                      §¾¾¢ : 19.03.2013

«ýÒò §¾¡Æ÷¸§Ç,  «Õ¨Áò §¾¡Æ¢Â÷¸§Ç ! Žì¸õ.                  
இமயத்தைத் தொட்ட அஞ்சல்          மூன்றின்
29-வது அகில இந்திய மாநாடு


கேரள மாநிலத்தில்
திருவனந்தபுரம் மண்ணில்
விண்ணைத் தொட்ட மாநாடு,
சிங்க நிகர் தலைவர்
தோழர் M . கிருஷ்ணன் அவர்கள்
பாங்குடனே நடத்திட்ட
இருபத்தி ஒன்பதாவது
அகில இந்திய மாநாடு !

 அனைத்து மாநிலச் செயலர்கள்
போர்ப்படைத் தளபதிகளாய்
அணிவகுத்து முன்செல்ல -
கோட்ட, கிளைச் செயலர்கள்
வீரமிகு தோழர், தோழியர்கள்
பதாகை பிடித்துப்  பின் செல்ல-
வழி நெடுகிலும் மற்றதுறை சார்ந்த 
தொழிற்சங்கத்தினரின் உற்சாக வரவேற்பு !
திருவனந்தபுரம் நகரை
திரும்பிப் பார்க்கச் செய்தது
செங்கொடி ஏந்திய அணிவகுப்பு !

 சீர்மிகு மாநாட்டரங்கம்
சிறப்புடனே நிரம்பி வழிய
வேயப்பட்ட வெளிப்பந்தலிலும்
அணியணியாய் காணப்பட்டது
அஞ்சல் ஊழியர் கூட்டம்.
அனைவரும் நிகழ்வுகளை
நிறைவாகக் கண்டுகளிக்க
ஆங்காங்கே அமைக்கப்பட்ட
தொலைக்காட்சிப் பெட்டிகளில்
நேரடி ஒலி(ளி)பரப்பு
நிகழ்ச்சி அமைப்பின் முத்தாய்ப்பு !

அணையா விளக்காய்
சமையலறை அடுப்புகள்-
எல்லோரும் ரசித்துப் புசிக்க
எல்லா நேரமும் விருந்தளிப்பு
ஆங்கே- ஒருங்கே ஈயப்பட்டது
செவிக்குச் சொல் உணவு
வயிற்றிற்கு நல் உணவு.

கண்களைக் கவரும்
சுற்றுலாத் தலமாயினும்
கருத்தைக் கவரும்
மாநாட்டு அரங்கத்திலேயே
மாபெரும் மக்கள் கூட்டம் !

இலாக்கா செயலர் (DG) அவர்களின் 
இந்திய அஞ்சல் துறையின் 
எதிர்காலம் பற்றிய கருத்தரங்கம்,
சார்பாளர்களின் அனல் பறக்கும் 
விவாதங்கள் - இவற்றிற்கிடையே
கலை நிகழ்சிகளும் நித்தம் உண்டு !

அகில இந்திய தலைவராய்
ஆந்திரத்து ஆற்றல்மிகு
தோழர் R. சிவநாராயணா அவர்களும்,
பொதுச் செயலராய்
கேரளத்துப்  போர்வாள்
தோழர் M. கிருஷ்ணன் அவர்களும்,
நிதிச் செயலராய்
டில்லி மாநில மாவீரன் 
தோழர் பல்விந்தர் சிங் அவர்களும்
தேர்வானர் அரங்கம்  மகிழ !

தொழிலாள வர்க்க விடிவெள்ளி
தோழர் KVS  அவர்களின் வழிகாட்டுதலில்
தங்கத் தமிழகத்திற்கு
தரமாய்க் கிடைத்தது
ஐவேறு முக்கியப் பதவிகள் !
 தீரமிகு சென்னை மத்தியக் கோட்ட
தோழர் N. கோபாலகிருஷ்ணன் அவர்கள்
செயல்தலைவராய் செயலாற்றவும்,
தளபதி நம் அண்ணாசாலை
தோழர் A. வீரமணி அவர்கள்
உதவி பொதுச் செயலராய்  பணியாற்றவும்,
இளவல் திருப்பூர் கோட்ட
தோழர் N. சுப்பிரமணியன் அவர்கள்
துணைப் பொதுச் செயலராய் வழி நடத்தவும்,
வீரமிகு சென்னைத் தோழியர்கள்
R. மணிமேகலை அவர்களும் ,
ஏஞ்சல் சத்தியநாதன் அவர்களும்
அகில இந்திய மகளிர் உபக்குழு
உறுப்பினர்களாய்  பாடுபடவும்
தேர்வானர் கரவொலியில் அரங்கம் அதிர
தமிழ் மாநிலம் மனம் குளிர !

பல்வேறு தீர்மாணங்கள்
தீர்க்கமாய் தீட்டப்பட்டு
சரித்திரம் படைத்திட்ட
சாதனை மாநாடாம் 
இருபத்தி ஒன்பதாவது
அகில இந்திய மாநாடு
இமயத்தைத் தொட்டதோடு
என்றும் இதயத்தில் நிறைந்திருக்கும் ! 
                                          - P. தியாகராஜன், செயலர்

கருத்துகள் இல்லை: