WELCOME

WELCOME TO ANNA ROAD DIVISIONAL BRANCH WEB SITE

18 அக்டோபர், 2014

“தொழிலாளர்களை அணுகுவதில் மாற்றம் தேவை”: பிரதமர் மோடி வலியுறுத்தல்


தொழிலாளர்களை அணுகும் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ஸ்ரம் சுவிதா என்ற பெயரில் இணைய தளத்தையும், பல்வேறு தொழிலாளர் சீர்திருத்தங்களையும் பிரதமர் மோடி இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது உடல் உழைப்புகளை வெளிப்படுத்தும் தொழிலாளர்களை நாம் மதிப்பதில்லை என குற்றம்சாட்டிய அவர், வாய்மையே வெல்லும் என்ற சொல் எந்தளவு சக்தி வாய்ந்ததோ அதே அளவு சக்தி வாய்ந்தது தொழிலாளர்களின் வெற்றி என்று கூறினார். தொழிலாளர்களின் பிரச்னைகளை அவர்களின் இடத்தில் இருந்து அணுக வேண்டும் என வலியுறுத்திய மோடி, அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஸ்ரம் ஸூவிதா இணையதளம் தொழிலாளர் மற்றும் தொழிற்சாலைகளின் விவரங்களை கொண்டிருக்கும் என்றார்.

நாட்டில் உள்ள 7 லட்சம் தொழிற்சாலைகளுக்கு, குறிப்பிட்ட அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நல ஆய்வாளர்களின் தேர்ச்சி மற்றும் பணிகளிலும் பல்வேறு மாற்றங்கள் இந்த திட்டம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: