WELCOME
30 செப்டம்பர், 2013
25 செப்டம்பர், 2013
GDS BONUS CEILING
GDS BONUS CEILING FOR RS.3500/- HAS BEEN APPROVED BY THE CABINET TODAY
NFPE இல்லாமல் உரிமைகள் இழந்தோம் !
NFPE க்குள் வந்ததால் இழந்த
உரிமையை மீண்டும் பெற்றோம் !
தியாகத்தின் வராலாறு NFPE !
வெற்றியின் வரலாறும் NFPE !
GDS bonus ceiling raised from Rs.2500 to Rs.3500 from this year itself
FLASH NEWS .... !!!!
GDS bonus ceiling for Rs.3500- has been approved by the Cabinet today. The bonus is sanctioned with prospective effect i.e., from this year itself.
|
18 செப்டம்பர், 2013
13 செப்டம்பர், 2013
10 செப்டம்பர், 2013
5 செப்டம்பர், 2013
PFRDA demonstration dt 05.09.2013
அண்ணாசாலை தலைமை அஞ்சலக வாயிலில் இன்று 05.09.2013 மதியம் 1.00 மணியளவில் அஞ்சல் மூன்று/ நான்கு சங்கங்கள் இணைந்து, தலைவர் தோழர் E . கிருபாகரன் தாமஸ் அவர்கள் தலைமையில் புதிய ஓய்வூதிய மசோதாவை எதிர்த்து மாபெரும் ஆர்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
தோழர் E. சிட்டிபாபு அஞ்சல் மூன்றின் துணை செயலர் வரவேற்புரை நிகழ்த்த, அஞ்சல் நான்கு மாநில செயலர் தோழர் V. ராஜேந்திரன் மற்றும் அஞ்சல் மூன்று மாநில நிதிசெயலரும், உதவி பொதுசெயலருமான தளபதி தோழர் A. வீரமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். தோழர் S. லோகநாதன் அஞ்சல் நான்கின் உதவிசெயலர் நன்றியுரை கூறினார்.
ஆர்பாட்ட புகைப்படங்கள்:
PFRDA demo on 05.09.2013
NFPE
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், குரூப்-C & Postmen, MTS/ GrD அண்ணாசாலை கிளை, சென்னை - 600 002
|
சுற்றறிக்கை எண் - 6 (உறுப்பினர் சுற்றுக்கு மட்டும்) தேதி : 05.09.2013
அன்புத் தோழர்களே, அருமைத் தோழியர்களே! வணக்கம்.
ஊழியர் விரோத PFRDA bill-ஐ எதிர்த்து இன்று 05.09.2013 மதியம் 1.00 மணிக்கு உணவு இடைவேளை ஆர்பாட்டம்
|
மத்திய/ மாநில அரசு ஊழியர்கள்/ ஆசிரியர் கூட்டமைப்பு ஆகியவை தொடர்ந்து புதிய
ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்துவரும் நிலையிலும், மத்திய அரசு, Pension Fund
Regulatory and Development Authority (PFRDA) bill -ஐ
நடப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரில் பிடிவாதமாக நிறைவேற்றியுள்ளது.
அதனை எதிர்த்து நேற்று (04.09.2013) பாராளுமன்ற விவாத நேரத்தில் நமக்கு
ஆதரவாக தொழிலாளர் நலனில் அக்கறையுள்ள பெருவாரியான பாராளுமன்ற உறுப்பினர்கள்,
பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
எனவே நாமும் ஊழியர் விரோத PFRDA bill
-ஐ எதிர்க்கும் வகையில் பாராளுமன்ற
வெளிநடப்பு நாளிலோ அல்லது அடுத்த நாளோ ஆர்பாட்டம் நடத்திட மத்திய அரசு ஊழியர்
மகா சம்மேளனம் விடுத்துள்ள அறைகூவலை ஏற்று, நம் அண்ணாசாலை கிளையின் சார்பாக
இன்று (05.09.2013) மதியம் 1.00 மணிக்கு (sharp) உணவு இடைவேளை ஆர்பாட்டம்
நடத்திட அனைவரையும் அலைகடலென ஆர்ப்பரித்து வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
போராட்ட
வாழ்த்துக்களுடன்,
R. சீனிவாசன் S. வெங்கடேசன்
செயலர் P4 செயலர்
P3
2 செப்டம்பர், 2013
pfrda
NFPE
TN NFPE COC
DECIDES TO HOLD
THE PROGRAMME ON 3RD SEPTEMBER 2013
அன்புத் தோழர்களுக்கு வணக்கம். !
நம்முடைய மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் மற்றும் நம்முடைய NFPE சம்மேளனம் எடுத்த முடிவினை அமல்
படுத்திட வேண்டி,
புதிய பென்ஷன் திட்டத்திற்கான மசோதா (PFRDA – PENSION FUND REGULATORY AND DEVELOPMENT AUTHORITY) பாராளுமன்றத்தில் எதிர்
வரும் செப்டம்பர் 2 அன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்
படுவதால் , தமிழ் மாநில NFPE சம்மேளனத்தின் கீழ் உள்ள
உறுப்பு சங்கங்கள் அடங்கிய தமிழ் மாநில அஞ்சல் - RMS இணைப்புக் குழுவின் சார்பாக எதிர்வரும் 03.09.2013 அன்று தமிழகம் தழுவிய அளவில் இந்த அறைகூவலை ஏற்று நடத்திட வேண்டிக்
கேட்டுக் கொள்கிறோம்.
அதே தேதியில் தமிழகத்தில்
, சென்னை மாநகரில் உள்ள கோட்டங்கள் உட்பட,
அனைத்து தலைமை அஞ்சலக / கோட்ட அலுவலக வாயிலில் PFRDA மசோதாவை
எதிர்த்து உணவு இடைவேளை கண்டன ஆர்ப்பாட்டமோ
அல்லது மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டமோ தவறாமல் நடத்திட
வேண்டுகிறோம்.
தமிழக அஞ்சல்
மூன்றின் மாநிலத்
தலைவரும் மாநிலச்
செயலரும் மதுரை கோட்டச் சங்கங்கள் ஏற்று
நடத்திடும் ஆர்ப்பாட்டத்தில் அதே தேதியில் கலந்து
கொள்வார்கள் என்று அறிவிக்கிறோம்.
இதற்கான செய்திகளை பத்திரிகை மற்றும் தொலைக்
காட்சி ஊடகங்களுக்கு
தவறாமல் அளித்து
மத்திய
அரசின்
கவனத்தை ஈர்த்திட
வேண்டுகிறோம்.
நமது போராட்டம் வெல்லட்டும் !
PFRDA மசோதா முடங்கட்டும் ! !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)