NFPE
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், குரூப்-C & Postmen, MTS/ GrD அண்ணாசாலை கிளை, சென்னை - 600 002
|
சுற்றறிக்கை எண் - 6 (உறுப்பினர் சுற்றுக்கு மட்டும்) தேதி : 05.09.2013
அன்புத் தோழர்களே, அருமைத் தோழியர்களே! வணக்கம்.
ஊழியர் விரோத PFRDA bill-ஐ எதிர்த்து இன்று 05.09.2013 மதியம் 1.00 மணிக்கு உணவு இடைவேளை ஆர்பாட்டம்
|
மத்திய/ மாநில அரசு ஊழியர்கள்/ ஆசிரியர் கூட்டமைப்பு ஆகியவை தொடர்ந்து புதிய
ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்துவரும் நிலையிலும், மத்திய அரசு, Pension Fund
Regulatory and Development Authority (PFRDA) bill -ஐ
நடப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரில் பிடிவாதமாக நிறைவேற்றியுள்ளது.
அதனை எதிர்த்து நேற்று (04.09.2013) பாராளுமன்ற விவாத நேரத்தில் நமக்கு
ஆதரவாக தொழிலாளர் நலனில் அக்கறையுள்ள பெருவாரியான பாராளுமன்ற உறுப்பினர்கள்,
பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
எனவே நாமும் ஊழியர் விரோத PFRDA bill
-ஐ எதிர்க்கும் வகையில் பாராளுமன்ற
வெளிநடப்பு நாளிலோ அல்லது அடுத்த நாளோ ஆர்பாட்டம் நடத்திட மத்திய அரசு ஊழியர்
மகா சம்மேளனம் விடுத்துள்ள அறைகூவலை ஏற்று, நம் அண்ணாசாலை கிளையின் சார்பாக
இன்று (05.09.2013) மதியம் 1.00 மணிக்கு (sharp) உணவு இடைவேளை ஆர்பாட்டம்
நடத்திட அனைவரையும் அலைகடலென ஆர்ப்பரித்து வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
போராட்ட
வாழ்த்துக்களுடன்,
R. சீனிவாசன் S. வெங்கடேசன்
செயலர் P4 செயலர்
P3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக