WELCOME

WELCOME TO ANNA ROAD DIVISIONAL BRANCH WEB SITE

30 டிசம்பர், 2015

NJCA வின் அறைகூவலுக்கு இணங்க அண்ணாசாலையில் இன்று உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்



NJCA வின் அறைகூவலுக்கு இணங்க அண்ணாசாலையில் இன்று உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் அஞ்சல் 4 இன் உதவி தலைவர் திரு J.சௌந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. அஞ்சல் 3 மற்றும் அஞ்சல் 4 தோழர் தோழியர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். இதில் அகில இந்திய உதவி பொது செயலர்
 திரு A.வீரமணி அவர்களும் முள்நாள் அகில இந்திய செயல் தலைவர் திரு   
N கோபாலகிருஷ்ணன் அவர்களும் சிறப்புரை ஆற்றினர். அஞ்சல் 3 இன் செயலர் S.வெங்கடேசன் நன்றி உரையாற்றினார்










22 டிசம்பர், 2015

நன்றி!!!

 நம்முடைய மாநிலசெயலர் திரு.J.Ramamurthy அவர்கள் 14.12.2015(திங்கள்கிழமை) அன்று CPMG திரு. Charles Lobo அவர்களிடம் Foremonthly meeting-ல் பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் Flood Advance வழங்குமாறு கேட்டு கொண்டார். அதை ஏற்று Flood Advance  வழங்கிய CPMG திரு. Charles Lobo மற்றும் மாநிலசெயலர் திரு.J.Ramamurthy அவர்களுக்கும் அண்ணாசாலை அனைத்து ஊழியர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

-செயலர்

1 டிசம்பர், 2015

Why government must hire more?

 In any country, the economy and society are usually ahead of the government, which causes a governance gap to emerge. In India, this gap is wide and growing. The only way to narrow it is by increasing the quality and, yes,the quantity of public officials. We do need to minimise government to maximise governance, but that refers to the scope of what the government does; not how many people the government employs.
    Despite the perception that our government is overstaffed, the reality is that India has very low numbers of civil servants who are necessary to carry out the basic functions of government. The Seventh Pay Commission refers to this in its report, noting that in the United States, the federal government has 668 employees per 1,00,000 population. In comparison, the Union government employs 139.This is not even considering the fact that under India’s constitutional structure, the Union government has a bigger charter than its American counterpart.
     India has one of the lowest ratios of government employees to population in the world. In a World Bank study in the late 1990s, Salvatore Schiavo-Campo, Giulio de Tommaso and Amitabha Mukherjee found that less than 1.5 per cent of India’s population was employed in government, which was behind countries such as Malaysia and Sri Lanka (4.5 per cent) and China (around 3 per cent). In fact, government employment ratios in the rich and better governed West are much higher: around 15 per cent in Scandinavian countries and 6-8 per cent in the U.S. and western Europe.
    Anyone who finds too much traffic and too few traffic policemen; too many foreign policy issues and too few diplomats; too much garbage and too few city officials; too many stray pigs and too few pig catchers (there is only one in entire Bengaluru) will attest to the fact that we actually do need more public officials. The shortage of officials is something that runs through the Union, State and local governments. In the Union government alone, the Seventh Pay Commission reports, there is an overall vacancy of around 18 per cent. It is unable to fill even the sanctioned strength, leave alone raising the numbers to levels adequate to deliver adequate baseline governance.
So, if we are concerned about improving governance, we should be really concerned about how to add strength to the machinery of the government. When you have only around 130 police personnel and 1.2 judges per 1,00,000 population, and you need at least 200 of the former and 10 of the latter, asking whether they are being overpaid misses the point.
     What the Modi government should do is announce that, is ready to pay its public officials well, increase their numbers, invest in building competency, and, in the same breath, restructure government machinery to remain current with the times. That would do wonders for minimum government, maximum governance.
(Nitin Pai is director of the Takshashila Institution, an independent think tank and school of public policy.)

28 நவம்பர், 2015

GST would be a major reform in India’s taxation system since 1947?

   The Goods and Services Tax (GST) is a value added tax that will replace all indirect taxes levied on goods and services by the Government, both Central and States, once it is implemented. The GST is all set to consolidate all State economies. This will be one of the biggest taxation reforms that will take place in India once the Bill gets officially the green signal to implement. The basic idea is to create a single, cooperative and undivided Indian market to make the economy stronger and powerful. The GST will see a significant breakthrough towards an all-inclusive indirect tax reform in the country.

Bottlenecks in the implementation of GST

Though the Government wants the GST Bill to be implemented by April 2016, there are certain bottlenecks which need to be taken care of before that:
  • What preparations are needed at the level of Central and State Governments for implementing the GST?
  • Whether the Government machinery is efficient enough for such an enormous change?
  • Whether the tax-payers are ready for such a change?
  • What will be the impact on the Government’s revenue?
  • How will the manufacturers, traders and ultimate consumers be affected?
  • Will GST help the small entrepreneurs and small traders?
If everything goes well, most likely the Bill will be legislated by April 2016. According to a study by the National Council of Applied Economic Research (NCAER), full implementation of the GST could expand India’s growth of gross domestic product by 0.9-1.7 percentage points. By removing the system of multiple Central and State taxes, the GST can help in reducing taxation and filing costs and expand business profitability, thereby attracting investments and promoting GDP growth. Simplification of tax norms can help in improving tax compliance and increasing tax revenues.

CENTRAL GOVT. EMPLOYEES OBSERVED BLACK DAY IN A BEFITTING MANNER ALL ACORSS COUNTRY – SHIVA GOPAL MISHRA

As per decision taken in the meeting of the National Joint Council of Action(NJCA), held on 20th November, 2015, all the constituents of the NJCA, including the Railwaymen, observed “Black Day” on 27th November, 2015, organising massive demonstrations, gate meetings, dharnas, bearing black badges across the country against the retrograde recommendations of the VII CPC, such as 
  1. Against the demand of the Staff Side, National Council(JCM) for Minimum Wage Rs.26,000, the VII CPC has recommended Rs.18,000, thereby widening the gap between Minimum and Maximum Wage as 1:13.8 while our demand was to keep this ratio not more 1:8, 
  2. The present rate of HRA, i.e. 30%, 20% and 10% has been reduced to 24%, 16% and 8% respectively, 
  3. The number of interest-free advance, like Festival Advance, etc. have been recommended to be stopped, 
  4. Instead of removing the existing anomalies in the MACPS, the Pay Commission has introduced examination for granting MACP benefit, 
  5. The Pay Commission has also refused to make any recommendation against the NPS, 
  6. In case of Child Care Leave for women employees, leave wage shall be reduced to 80% for second spell of 365 days CCL.
Giving above referred to details here, Shri Shiva Gopal Mishra, General Secretary, All India Railwaymen’s Federation and Convener, NJCA, said, “almost all the Central Government employees have joined today’s protests and have pledged for sustained struggle”.
  He further said, “if the Central Government does remove retrograde recommendations of the VII CPC and resolve long pending genuine demands of the employees, more than 30 lakh employees working in the Railways, Defence, Postal and other Central Government Organisations, will be forced to go for indefinite strike”.

Central Govt Employees To Get PPO, Other Benefits On Retirement Day

New Delhi: The government has decided to give pension payment order (PPO) and all other retirement benefits on the day of retirement to all 50000 central government employees retiring every year, Union minister Jitendra Singh said on Thursday.

“The goal is to ensure 100 per cent payment of all retirement benefits and the delivery of pension payment order (PPO) to retiring employees on the day of retirement itself,” The Minister of State for Personnel, Public Grievances and Pensions Jitendra Singh said at the inauguration of a workshop on ‘Bhavishya ’, an online pension sanction and payment tracking system for central government retirees.

“Last year of a retiring employee is spent in preparation of pension payment order (PPO) and collecting no-dues certificates as he fears no one will let him in after he retires. The reputation of a retiring government servants becomes such that he is preparing to get his pension on time. This is just not done,” Singh said

“Our experience shows pension payments are considerably delayed. Retirees need a dignified exit from service and can’t be expected to run around for their pension payment order (PPO) and all retirement benefits or make requests to someone for it,” said an official on this occasion.

Bhavishya involves preparation of advance list of employees retiring in the next 12 months and sending each such employee a login and password for ‘ Bhavishya ‘ portal eight months before the date of his retirement on his mobile phone and e-mail ID.

The employee fills up his details on the portal and based on that information, pension forms are auto-generated by the software and submitted for processing. The system then sends SMS and e-mail alerts to the employee, his head of department and disbur...

The Minister said apart from ensuring timely disbursal of pension, the Department is also holding pre-retirement counselling for employees and considering various options on how best to utilize the experience of retired personnel who can contribute a lot to the government and society as they are energetic and resourceful for long beyond 60 years of age.

27 நவம்பர், 2015

ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் இன்றைய தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து ஆர்பாட்டம்  நடத்தினர் 

அண்ணாசாலை அஞ்சலகத்தில் நடைபெற்ற ஆர்பாட்டம் 

















23 நவம்பர், 2015



                               NFPE
      அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்குரூப் 'சி ’
     தமிழ் மாநிலம் , தேனாம்பேட்டை, சென்னை 600 018.
சுற்றறிக்கை  எண் : 2                                                                                                        நாள் : 21 .11.2015

பெறுநர்: மாநிலச்சங்க நிர்வாகிகள் / கோட்ட/ கிளைச் செயலர்கள், மாநில மகிளா கமிட்டி உறுப்பினர்கள்.

அன்புத் தோழர்களே !  தோழியர்களே !   வணக்கம் !

ஏழாவது ஊதியக் குழுவும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும்

ஐந்து  ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய விகிதங்கள் மாற்றப் படவேண்டும் என்றும்  50 சதம் பஞ்சப்படி உயர்ந்தவுடன் , உடனே ஊதியக் குழு அமைக்கப்படவேண்டும் என்றும் மத்திய அரசு ஊழியர்கள் பகுதியில் முதல் குரல் கொடுத்தது நம்முடைய அஞ்சல் மூன்று சங்கமும் தொடர்ந்து நம்முடைய NFPE சம்மேளனமும் அதன் பின்னர்  மத்திய அரசு ஊழியர் மகா  சம்மேளனமும்தான் என்பது மறுக்க முடியாத  உண்மையாகும் .

26.7.2012 பாராளுமன்றம் நோக்கிய பேரணி, 12.12.2012 நாடு தழுவிய ஒருநாள் வரலாற்று சிறப்பு மிக்க வேலை நிறுத்தம், 20.2.2013, 21.2.2013 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம், 12.11.2013 GDS ஊழியர்களுக்கான பாராளுமன்றம் நோக்கிய பேரணி, 12 & 13.2. 2014  இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம், 28.4.2015பாராளுமன்றம் நோக்கிய பேரணி என்று தொடர்ந்து போராடியது நம்முடைய தொழிற்சங்கங்கள். ரயில்வே பாதுகாப்புத் துறை சங்கங்கள், பேரணி வரைதான் நம்முடன்  வந்தன. வேலை நிறுத்தத்திற்கு அவர்களை கொண்டு வர  இயலவில்லை. இப்படி தொடர் போராட்டங்கள் மூலம்தான் முன்னதாகவே ஊதியக் குழுவை நாம் அமைக்கப் பெற்றோம் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

மேலும் ஊதியக் குழுவுக்கான மிகச் சிறப்பான கோரிக்கை மனுவை முதலில் தயார் செய்ததும் அதன் வழியே இதர அமைப்புகளிலும் ஒரே பார்வையில் கோரிக்கை மனுவை தயார் செய்து  ஊதியக் குழுவிடம் அளிக்க வைத்ததும் நம்முடைய  தலைவர்களே. இப்படி செய்ததும் இதுவே முதல் முறையாகும். மேலும் ஊதியக் குழு முன்னர் NJCA, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம், NFPE என்று தனித்தனியே கோரிக்கை மனு அளித்து நம்முடைய வாதங்களை தெளிவாக எடுத்து வைத்தோம்.

ஊதியக் குழு அறிக்கையை காலதாமதமாகப் பெற மத்திய அரசு விரும்பினாலும், தொடர் போராட்டங்கள் நடத்தி, அரசு நீட்டித்த காலக் கெடுவுக்கு முன்னதாகவே அறிக்கையை நாம் பெற்றோம். இப்படி வாராது வந்த மாமணிபோல் 10 ஆண்டுகளுக்கு பிறகு நாம் போராடிப் பெற்ற ஊதியக் குழு, ஒட்டுமொத்தமாக மத்திய அரசு ஊழியர்களையும் குறிப்பாக அஞ்சல் பகுதி ஊழியர்களை ஏமாற்றி விட்டது , வஞ்சித்துவிட்டது.. இதுவரை பெற்று வந்த சலுகைகளைக் கூட பறித்துக் கொண்டது. ஒட்டுமொத்தமாக பெரும் அநீதி இழைத்து விட்டது. இத்தனைக்கும்  ஊதியக் குழுவின் தலைவர் ஒரு நீதி அரசர். ஆனால் நீதியே இல்லாத CORPORATEமனப்பான்மையுடன் கூடிய அறிக்கை. இதற்குக் காரணம், சுதந்திரமாக செயல்படவேண்டிய அமைப்பான  ஊதியக் குழு மீது மத்திய அரசின்  நேரடித் தலையீடு. ஊதியக் குழுவின் அறிக்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சரே நேரடியாக வெளியிட்ட அறிவிக்கை.

ஊதியக் குழு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

1. ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலாகும் தேதி 1.1.2016 முதல் .  நமது கோரிக்கை 1.1.2014  முதல்.
2. பரிந்துரைக்கப்பட்ட கடை நிலை ஊழியருக்கான குறைந்த பட்ச ஊதியம் ரூ. 18000/-.
  15 ஆவது ILC கணக்கீட்டின்படியும் DR. அக்ராய்டு அவர்களால் வகுக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதிய
  நிர்ணய கணக்கீட்டின்படியும் அனைத்து மத்திய அரசு ஊழியர் கோரிய  ஊதியம் ரூ. 26000/-
3. பரிந்துரைக்கப்பட்ட FITMENT FORMULA பெருக்க மடங்கு (MULTIPLICATION FACTOR) 2.57 ஆகும்.  நாம்
   கோரியது 3.7 ஆகும் . (26000/7000).
4. பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயத்தில் எந்த மாற்றமும் இல்லை.  முந்தைய ஊதியத்தில் ஒருINCREMENT
   மட்டுமே.  நாம்  கோரியது  இரண்டு INCREMENT.         

5. வருடாந்திர ஊதிய உயர்வு  அடிப்படை ஊதியத்தில் 3%.    நாம்  கோரியது   5%.
6. MACP வழங்குவதில் எந்த மாற்றமும் இல்லை. நாம் கோரியது  30 ஆண்டுகளில் 5 முறை , முறையே  8, 15, 21,
   26 மற்றும் 30 ஆண்டுகளில்.
7.  PAY BAND  மற்றும்  GRADE PAY  முறை ஒழிக்கப்பட்டது.  புதிய ஊதிய நிர்ணய முறையாக 40  
   ஆண்டுகளுக்கான “ MATRIX BASED OPEN ENDED PAY STRUCTURE “ அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.    
   நாம் கோரியது PAY BAND  மற்றும்  GRADE PAY  முறை ஒழிக்கப் படவேண்டும். முடிவற்ற ஊதிய 
   விகிதம்    அறிவிக்கப்பட வேண்டும்.
8.  பரிந்துரைக்கப்பட்ட அதிக பட்ச ஊதிய உயர்வு 14.29 சதவீதம் மட்டுமே .  நாம் கோரியது அனைத்து
    ஊழியர்களுக்கும்  40% ஊதிய உயர்வு.
9.  குறைந்த பட்ச ஊதியத்திற்கும் உச்ச மட்ட ஊதியத்திற்குமான  பரிந்துரைக்கப்பட்ட வகையில் 
    விகிதாசாரம்
    1: 11.4 ( 18000: 205400 )  .  நாம் கோரிய  விகிதாசாரம்  1:8 .
10. PAY SCALE  எண்ணிக்கை குறைக்கப் படவில்லை.  நாம்  குறைத்திடக் கோரினோம்.
11. இதுவரை பெற்றுவந்த 52 ALLOWANCE களை ஒழித்திட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில்
    முக்கியமானவ ஒரு சில :-

                Assisting Cashier Allowance, Cash Handling Allowance, Treasury Allowance, Handicapped Allowance, Risk Allowance, Savings Bank Allowance, Special compensatory (Hill Area) Allowance, Cycle Allowance, Family Planning Allowance, over time allowance.

12. வீட்டு வாடகைப்படி X, Y, Z  பகுதிகளுக்கு தற்போது இருக்கக் கூடிய 30%, 20%, 10%  இல்  இருந்து 
    முறையே 24% ,  16% மற்றும்  8% ஆக குறைக்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  நாம் கோரியது 
    முறையே  60%, 40% 20% ஆகும்.
13. D.A. FORMULA வில் எந்தவித மாற்றமும்  இல்லை.
14. CASUAL LEAVE  உயர்த்தப்பட்  பரிந்துரைக்கவில்லை. நாம்  உயர்த்தப்பட வேண்டும் என்று 
    கோரினோம்.
15. HOUSE BUILDING ADVANCE உயர்த்தப்பட  பரிந்துரைக்கப்படவில்லை.
16. CHILD CARE LEAVE முதல்  365  நாட்களுக்கு முழு ஊதியத்துடனும்  அடுத்த    365 நாட்களுக்கு 80% 
    ஊதியத்துடனும் வழங்கிட பரிந்துரைக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த  சலுகை பறிக்கப் பட்டுள்ளது.
17.  மகப்பேறு விடுப்பில்  மாற்றம்  இல்லை.
18. ஓய்வுபெறும் போது   LEAVE ENCASHMENT MAXIMUM 300  DAYS  என்பது உயர்த்தப் படவில்லை.
19.  MEDICAL REIMBURSEMENT, CGHS   திட்டங்களுக்கு  பதிலாகஅரசின் நிதிச் சுமையைக்  குறைக்க
    பணியில் இருக்கும் மற்றும் ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு அவரவர்கள் PREMIUM செலுத்தலில் 
   MEDICAL INSURANCE திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
20. TRANSPORT ALLOWANCE 125%  பஞ்சப்படி  அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட உள்ளதால் கீழே
    காணும் வகையில் வழங்கப்படும்.
Pay Level
Higher Transport Allowance cities (A, AI)
Other places
9 and above
7200 + DA
3600 + DA
3 to 8
3600 + DA
1800 + DA
1 and 2
1350 + DA
900 + DA








21.  LTC  வழங்குவதில் மாற்றமில்லை. சேவைக்காலத்தில் ஒரு முறையாவது வெளிநாடு செல்வது என்ற
     கோரிக்கை மறுக்கப்பட்டது.
22.  PERFORMANCE RELATED PAY என்பது அறிமுகப் படுத்தப்படுகிறது. இனி BONUS என்பது  PERFORMANCE
    RELATED PAY யுடன்  இணைத்திட (SUBSUMED) வழி வகுக்கப்பட்டுள்ளது.
23.  முதல் 20 ஆண்டுகளில்  பணித்திறன் “ மிக நன்று “ என்று அதிகாரிகளிடம் இருந்து
     பரிந்துரைக்கப்படாத ஊழியர்களுக்கு   EFFICIENCY BAR  முறை மூலம் ஆண்டு ஊதிய உயர்வு 
     நிறுத்தப்படும்.  பணித்திறன் இழந்ததாகக் கருதப்படும் ஊழியர்கள் பணியிலிருந்து வெளியேற்ற
    (COMPULSORY RETIREMENT) பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
24.   புதிய  ஓய்வூதியத்  திட்டம் தொடரும்.
25.   GROUP INSURANCE கீழே காணும் வண்ணம் மாற்றப்படுகிறது.
     Level                                Monthly Contribution           Insurance Amount
     1 to 5                   1500                                       15 Lakhs
     6 to 9                   2500                                       25 lakhs
     10 and above      5000                                       50 lakhs
26.   குறைந்த பட்ச  ஓய்வூதியம்   ரூ9000/-  ( 50%  OF MINIMUM PAY  VIZ. RS. 18000/-)
27.   FIXED MEDICAL ALLOWANCE   உயர்த்தப் படவில்லை.
28.   GDS ஊழியர்களை CIVILIAN EMPLOYEE ஆக கருத முடியாது என்று கூறி அவர்களது கோரிக்கைகளை
      பரிசீலிக்க  மறுப்பு.

அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகள் அடியோடு மறுப்பு

1.  அஞ்சல் எழுத்தர்கள் , RMS பிரிப்பாளர்கள் , தபால்காரர்கள் மற்றும் MTS  ஊழியர்களுக்கு  மற்றைய
    மத்திய அரசு ஊழியர்களை விட   உயர்த்தி வழங்கப்பட்ட  ஊதிய  விகிதக் கோரிக்கை  தற்போது
    மறுக்கப்பட்டுள்ளது.  ஆனால் IP, ASP, SP, SSP போன்றவர்களுக்கு  உயர் ஊதியக் கோரிக்கை
    ஏற்கப்பட்டுள்ளது.
2.  SYSTEM ADMINISTRATORS ,  MARKETING EXECUTIVE  களுக்கான  தனி  CADRE வேண்டிய கோரிக்கையும்
    உயர் ஊதியக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
3.  MACP க்கு  பெஞ்ச் மார்க்  இனி  VERY GOOD ‘  பெற வேண்டும் .

போராட்டப் பாதையில் அனைத்து மத்திய அரசு ஊழியர்களின்  JCA

7 ஆவது ஊதியக் குழுவின் பிற்போக்குத்தனமான  பரிந்துரைகளை நாம் கடுமையாக எதிர்க்கிறோம். ஏனெனில்  10  ஆண்டுகள்  கழித்து வழங்கப்படும் ஊதிய  உயர்வு  வெறும் 14.29% மட்டுமே.  அதன் மூலம் ஏற்பட்டிருக்கும் ஊதிய உயர்வினால் அரசுக்கு 1 லட்சம் கோடி செலவு  என்று  ஊடகங்களில் பொய் பிரச்சாரம் செய்யப்படுவதை  நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இது பொது மக்களை  அரசு ஊழியர்களுக்கு எதிராக தூண்டிவிடும்  கேவலமான அரசியல் அன்றி வேறு  எதுவுமாக இருக்க முடியாது.

உதாரணத்திற்கு சாதாரண கடை நிலை ஊழியரின்  ஊதியம் குறித்து  பார்த்தாலே இது தெளிவாகப் புரியும் . 

தற்போது MTS  ஊழியர் வாங்கும் ஆரம்ப நிலை சம்பளம்                        : ரூ. 7000/-
1.1.2016 முதல் வழங்க வேண்டிய   D .A .  125%                                                :  ரூ. 8750/-
ஆக 1.1.2016 இல்  பெறும்  மொத்த ஊதியம்                                             :   ரூ.15750/-

தற்போது ஊதியக் குழு 125% D.A. சேர்த்து நிர்ணயித்துள்ள 
ஆரம்ப நிலை அடிப்படை  ஊதியம்                                                          ரூ.18000/-

இரண்டிற்கும் வித்தியாசமான  ஊதிய உயர்வு                                         ரூ. 2250/- மட்டும்.
ஆனால் தற்போது அவர் கட்டவேண்டிய 
NPS  CONTRIBUTION    அடிப்படை ஊதியத்தில்    10%                                                          :  ரூ. 1800/-
தற்போதைய திட்டப்படி  அவர் கட்டவேண்டிய 
CGEGIS  PREMIUM  தொகை                                                                       : ரூ. 1500/-
(இரண்டு தொகைகளுமே  அரசிடம்தான் செல்லும் . 
உடனே ஊழியருக்கு  திரும்ப வராது . )

மொத்தம் அவர்  உடனடியாக கட்டவேண்டிய  தொகை                          : ரூ. 3300/-

உயர்த்தப்பட்டது  ரூ. 2250/- கட்டவேண்டிய ரூ. 3300/-. அப்படியானால் TAKE  HOME PAY  என்னவாகும் ? HRA  யும் குறைக்கப்பட்டு விட்டது.  TPA  மட்டும் பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பதால்  உயருகிறது. அப்படியானால் அரசுக்கு செலவினம் என்பது  எவ்வளவு ?

இது போலத்தான் ஒவ்வொரு ஊழியருக்கும் .  நிலைமை இதுவாக இருக்கஅரசுக்கு ஒரு லட்சம் கோடி உடனடியாக  எப்படி செலவாகும் இதுபோல பல செய்திகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஒட்டு மொத்தத்தில் ஊதியக் குழு என்ற போர்வையில்  மத்திய அரசு தனது  ஊழியர்களை அடியோடு ஏமாற்ற நினைக்கிறது. மேலும் CORPORATE மயத்தை நோக்கி செல்வதற்கான கொத்தடிமைத் திட்டத்தை (ROAD MAP)தெளிவாக வகுத்துள்ளது மோடி அரசு.

இந்த நிலைமைகளை கணக்கில் கொண்ட ரயில்வே பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் கூட்டு அமைப்பான  NJCA முதற்கட்டமாக  எதிர்வரும் 27.11.2015 அன்று அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கறுப்புச் சின்னம்  அணிந்து அவரவர்  இடங்களில் ஊழியர்களை ஒன்று திரட்டி எழுச்சி மிகு  கண்டன ஆர்பாட்டம்  நடத்திட தாக்கீது அனுப்பி உள்ளது . இதனை  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனமும் நம்முடைய NFPE சம்மேளனமும்  ஏற்று நடத்திட வேண்டுகிறது. எனவே  

தமிழகமெங்கும் (சென்னை பெருநகர கோட்டங்கள் உட்பட)

1. எதிர் வரும்  27.11.2015 அன்று அனைத்து ஊழியர்களும் அவரவர் பணியிடத்தில் கருப்பு சின்னம் அணிந்து மத்திய  அரசுக்கு  நம்  எதிர்ப்பை  தெரிவிக்க  வேண்டுகிறோம்.

2.  அதே  நாளில்  அந்தந்த தலைமை அஞ்சலக  வாயிலில்  மற்றும் கோட்ட அலுவலக வாயிலில்   உணவு      இடைவேளை அல்லது மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம் .


3.  இந்த செய்தியை  அனைத்து   அச்சு மற்றும் காட்சி ஊடங்களுக்கு  தெரிவித்து  உங்களது
   போராட்டத்தை பதிவு செய்திட வேண்டுகிறோம்.

4.  போராட்ட  நிகழ்வில்   எடுக்கப்படும்  புகைப்படங்களை  ஈமெயில்  மூலம்  மாநிலச்     சங்கத்திற்கு
   உடனே  அனுப்பிட  வேண்டுகிறோம். (பல தோழர்கள் ஒரு வாரம் கழித்து அனுப்புகின்றனர். அதற்குள் 
   அந்த செய்தி  பழமையானதால் நம்  வலைத்தளத்தில்  பிரசுரிக்க  இயலாமல் போகிறது  என்பதை  
   நினைவில் கொள்ளவும்.)

மாநிலத் தலைமையகத்தில்  மாபெரும்  ஆர்ப்பாட்டம்

இதற்கு முன்னோட்டமாக  ஆயிரக்கணக்கில் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கலந்துகொள்ளும் வண்ணம்  நம்முடைய  தமிழ் மாநில தலை நகராம் சென்னையில்  அண்ணா சாலை  தலைமை அஞ்சலக வளாகத்தில்   தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில்  

எதிர்வரும்  24.11.2015  செவ்வாய்  அன்று மதியம் ஒரு மணியளவில்
உணவு  இடைவேளையில்
ஒரு மாபெரும்  கண்டன ஆர்பாட்டம்

நடைபெற அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் போராட்டத்தில் சென்னை பெரு நகர மண்டலத்தில் இருக்கும் அனைத்து பகுதிகளில் இருந்தும்ஆயிரக்கணக்கில்  தோழர்/தோழியர் அணிதிரள வேண்டுகிறோம். அனைத்து சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள் கோட்ட/ கிளைச் செயலர்கள்  கண்டிப்பாக  இந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு  நம்  முழு எதிர்ப்பை பதிவு செய்திட  கேட்டுக் கொள்கிறோம். 

இது வெறும்  ஆர்ப்பாட்டம்  அல்ல                                        உங்களின்  உணர்வு !
இது  வெறும்  போராட்டமல்ல !                                                உங்களின்  வாழ்வு

பரவட்டும் !                                                                          போராட்ட  தீ  பரவட்டும் !
முழங்கட்டும்  !                                                             உரிமை  முழக்கம்  முழங்கட்டும் !

எட்டட்டும் !  46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் உரிமைக் குரல்
 மத்திய  அரசின் செவிகளுக்கு எட்டட்டும் !

இன்றில்லையேல்  இனி  அடுத்த பத்து  ஆண்டுகளோ ?
 அல்லது  அதுவும் இல்லையோ எவருக்கும் தெரியாது .

தோழமை வாழ்த்துக்களுடன்
J. இராமமூர்த்தி , மாநிலச் செயலர் .


குறிப்பு

1. எதிர்வரும் டிசம்பர் திங்கள் 1 மற்றும் 2 தேதிகளில் நமது சம்மேளனத்தால் அறிவிக்கப்பட்டு நடைபெற உள்ள காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கான  தமிழக NFPE இணைப்புக் குழுவின் சுற்றறிக்கை இத்துடன் அனுப்பப் பட்டுள்ளது. நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச் சங்க நிர்வாகிகள்,கோட்ட / கிளைச் செயலர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள  NFPE இன் இதர  உறுப்புச் சங்கங்களின் நிர்வாகிகளுடன் கலந்து கூட்டாக  போராட்ட கூட்டங்கள் நடத்திட வேண்டுகிறோம். இந்த வேலை நிறுத்தத்தை முழு வெற்றிகரமாக ஆக்கிட கேட்டுக் கொள்கிறோம்.

2.  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலரும் 19  ஆண்டுகாலம் தமிழக அஞ்சல் இயக்கத்தை வழி நடத்தியவரும், எண்ணற்ற அடுத்த தலைமுறை இளைஞர் சக்தியை உருவாகிய தலைவரும் அஞ்சல் பகுதி தோழர்களுக்கென தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்த அஞ்சா நெஞ்சன் என்று போற்றப்பட்ட அன்புத் தலைவர் தோழர். பாலு அவர்கள் கடந்த 20.10.2015 அன்று இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் கொடி தாழ்ந்த அஞ்சலி. அவர்தம் இறுதி சடங்கு நிகழ்வுக்கு அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் நிர்வாகிகள், முன்னோடிகள் என  சென்னையில் இருந்து தனிப் பேருந்து மூலமும்   தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் நூற்றுக் கணக்கான தோழர்கள் சென்று கலந்து கொண்டோம். அந்த பேருந்தில் வந்தவர்களிடமே உடனடி நிதி உதவி ஏற்பாடு செய்து  அவரது குடும்ப நிதியாக ரூ. 25000/-  மாநிலச் செயலர் தோழர். J. R. மூலம் வழங்கப்பட்டது.  அவரது நினைவேந்தல் நிகழ்ச்சி மாநிலச் சங்கத்தின் சார்பில் எதிர்வரும் டிசம்பர் திங்கள் முதல் வாரத்தில் சென்னையில்  நடத்தப்பட உள்ளது. அதற்கான சுற்றறிக்கை தனியே  வெளியிடப்படும். இந்த நிகழ்வில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தோழர்கள் கலந்துகொள்ள கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.